tamilnadu

img

கும்பகோணம் தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் போராட்டம்

கும்பகோணம், ஆக.23-  கும்பகோணத்தை அடுத்த திருமண்ட ங்குடி இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சரியான முறையில் கரும்பு அரவை செய்யவில்லை. இந்நிலையில் 2016-17, 2017-18 ஆண்டுகளில் வெட்டப்பட்ட கரும்பிற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தினை சரியாக வழங்காமல் நிலுவை யில் இருந்து வந்தது. இதனை கண்டித்து விவசாயிகள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர்.   இந்நிலையில் கடந்தாண்டு கரும்பு அரவையை ஆலை நிர்வாகம் நிறுத்தியது. இதனால் விவசாயிகள் பயிர் செய்த கரும்பினை வேறொரு ஆலைக்கு வெட்டி அனுப்பினர். இந்நிலையில் 2018 மே மாதம் முதல் 2019 ஜூலை மாதம் வரை 18 மாதங்கள் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் 287 ஊழியர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை. இதனை வழங்க வேண்டும் எனக் கோரி ஆலை ஊழியர்கள் பல கட்டமாக பல போராட்டங்கள் நடத்தினர். ஆனால் ஆலை நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கி விட்டது எனக் கூறி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் இருந்து கமிட்டி அமைக்கப்பட்டு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்து சென்றது. இதனைத் தொடர்ந்து ஊதியம் வழங்க விட்டாலும் பரவாயில்லை பணிக்கு வருவோம் என ஊழியர்கள் தெரிவித்ததன் பேரில் தொடர்ந்து பணிக்கு ஊழியர்கள் சென்று வந்தனர். இந்நிலையில் வியாழன் மாலை ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள தகவல் பலகையில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டது. அந்த கடிதத்தில் 11 பேர் மட்டும் ஆலை பணிக்கு வந்தால் போதும். மீதி உள்ளவர்கள் பணிக்கு வர வேண்டாம் என தெரிவித்திருந்தது.  இதனை கண்டித்து வெள்ளிக்கிழமை அதிகாலை ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் தியாகராஜன், ஆகியோர் முன்னிலையில் சர்க்கரை ஆலை ஊழி யர்கள் ஆலை வாயிலில் நின்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கபிஸ்தலம் காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆலையின் பொது மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

;