tamilnadu

img

மின்வாரிய கேங்மேன் தேர்வு பயிற்சி வகுப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மாந கர் வட்டம் சார்பில் ஞாயிறு அன்று ஜேம்ஸ் பள்ளியில் மின்வாரிய கேங்மேன் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரெங்க ராஜன் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் துவக்கி வைத்து பேசினார்.  எழுத்துத் தேர்வு குறித்து செயற்பொறியாளர்கள் சண்முக சுந்தரம், திருமூர்த்தி, மணிமாறன் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட நிர் வாகிகள் ராதா, நடராஜன், மணி கண்டன் உள்ளிட்டோர் செய்தி ருந்தனர். பயிற்சி வகுப்பில் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாதிரி வினா-விடை புத்தகம் இலவச மாக வழங்கப்பட்டது. முன்னதாக வட்ட செயலாளர் செல்வராஜ் வர வேற்றார். பொருளாளர் இருதய ராஜ் நன்றி கூறினார்.