tamilnadu

img

ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் அரியலூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் அகிலாவுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் மணியரசிக்கு தென்னை மர சின்னத்தி லும் வாக்களிக்கக்கோரி ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவேலப்பர் கோவில் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. தொடர்ந்து அந்த பல்வேறு பகுதிகளில் தோழமை கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலா ளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மீனா, ஒன்றிய குழு உறுப்பினர் சி.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா ஜலம், திமுக ஒன்றிய செயலாளர் பரிமாற்றம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பிரச்சார பொறுப்பாளர் இலக்கியதாசன், ஒன்றிய செயலாளர் முத்து உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

;