tamilnadu

img

தினக் கூலி ரூ.625 வழங்கக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி ரூ.625 தினக்கூலி வழங்க வேண்டும். பி.எப்.பணத்தை உடனே தொழிலாளர்களின் பி.எப்.கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய் அன்று ஆட்சியர் அலுவ லகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு துப்புரவு தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மாறன், பொருளாளர் விஜ யன்,  துணைத்தலைவர் டோம்னிக், சிஐடியு மாநகர செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்தி கேயன், வி.ச.மாவட்ட செயலாளர் சங்கிலிதுரை, போக்குவரத்து தொழிலாளர் சங்க துணைத் தலைவர் சீனிவாசன், பொதுசெயலாளர் கரு ணாநிதி, துணை பொதுசெயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். துப்புரவு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வளர்மதி, ராதா, விமலா, ராம சாமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.