tamilnadu

img

குடிதண்ணீர் கேட்டு சிபிஎம் நூதனப் போராட்டம்

தஞ்சாவூர், நவ.29- அம்மையகரம் ஆதி திராவிடர் தெருவிற்கு ஒரு ஆண்டு காலமாக குடி தண்ணீர் வழங்காத ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தை கண்டித்தும், உடன டியாக தண்ணீர் வழங்க  வேண்டும் என வலியுறுத்தி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.  திருவையாறு ஒன்றியம் அம்மையகரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு விற்கு கடந்த ஒரு ஆண்டு காலமாக குடிநீர் வழங்கப் படவில்லை. இதனால் அவ திப்பட்ட மக்கள் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணைய ரிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். 

எனவே இந்த பகுதிக்கு உடனடியாக குடிநீர் வசதி வழங்க வேண்டும். 25 வரு டங்களுக்கு முன்பு கட்டப் பட்ட ஒட்டு காலனி தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலை யில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பாக அவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டும். 100 நாள் சம்பள  பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். கழிப்ப றை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த பி.நடராஜன், கே. வரதராஜன், எஸ்.கண்ணன், என். மணி, கே.தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். 

ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே. மதியழகன், துரை.இராமலிங்கம், ஆர். பிரதீப் ராஜ்குமார், என்.அறி வழகன், பி.ஏ.பழனிச்சாமி, பி.செந்தாமரைச்செல்வி, எம்.வெங்கடேசன், கிளைச் செயலாளர்கள் கே.அமர் சிங், டி.குமார், எஸ்.முரு கேசன், கே.பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றோர் தப்பு அடித்தும், சங்கு ஊதியும், பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணைய ரிடம் கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளிக்கப் பட்டது.