tamilnadu

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல்

தஞ்சாவூர், பிப்.28- கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் ஒப்புக் கொண்டதை யடுத்து, பிப்.28 நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில், ‘குடமுருட்டி பாலம் அருகில் மதுக்கடை திறக்கக் கூடாது, திருக்காட்டுப்பள்ளியில் சாக்கடைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பூதலூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் சமாதானப் பேச்சு வார்த்தை, வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூத லூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சிவசாமி, ஆர்.உதயகுமார், பி.முருகேசன், எஸ்.மெய்யழகன், பி.கலைச்செல்வி, டி.ஸ்ரீதர், ஏ.செபஸ்தியார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், “திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி பாலத்தின் அருகே, டாஸ்மாக் மதுக்கடை திறக்க அனு மதி அளிக்கப்படாது. திருக்காட்டுப் பள்ளி பேரூராட்சி பகுதியில் சாக்கடை கழிவுகள் ஒரு வார காலத் திற்குள் அகற்றப்படும். மனை யேறிப்பட்டி - கடம்பங்குடி சாலை நீட்டிப்பு, மாரநேரி கால்நடை மருந்த கம் நிரந்தரமாக செயல்படுவது, பூண்டி-சென்னைக்கு மீண்டும் பேருந்து இயக்குவது ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும். திருக்காட்டுப் பள்ளி சுற்றுவட்டச் சாலை பணிகள் தொடர்பாக மாவட்ட வருவாய் அலு வலர் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது” எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

;