தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை முத்திரைத் தாள் கட்டண தனித்துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி அரசு மருத்துவமனை டாக்டர் கலைக்கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் சுகாதார விழிப்புணர்வு உரையாற்றினர். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, துணை வட்டாட்சி யர்கள் யுவராஜ், சுந்தரமூர்த்தி, கவிதா, வருவாய் ஆய்வாளர்கள் கிள்ளிவளவன், சுப்பிர மணியன், பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேராவூரணி பள்ளி வாசலுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பேராவூரணி நகர் முழுவதும், பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன் ஆகியோர் கண்காணிப்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.