tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி, மே 8- தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின நிகழ்ச்சி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளியன்று தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோழர் வி.பி.சிந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரி யாதை செலுத்தப்பட்டது.  சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், மின்ஊழியர் மத்திய அமைப்பு கோட்டச் செயலாளர் நடராஜன், ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்தி ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று மன் னார்புரத்தில் உள்ள சிஐடியு யூனியன் அலுவலகத்திலும் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், மறைந்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு கடைப்பிடிக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஓய்வூதியர் சங்க தலைவர் சிவ சுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் கே.டி கந்தசாமி, சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் ஜி.ரகுபதி, இணைப்பு சங்க தலைவர்கள் விஎஸ்டி.தனுஷ்கோடி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகர செய லாளர் கே பிச்சை கண்ணு,  விவசாயிகள் சங்க நகர செய லாளர் ஜி மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். 

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் தோழர் வி.பி.சிந்தன் உருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் சிஐடியு தலைவர்கள் ஜி. பழனிவேல், எம்.தர்மலிங்கம், எஸ்.வைத்தியநாதன், ராஜசேகர், மூத்த உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.      தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிஐடியு மாவட்டக்குழு அலு வலகத்தில் தோழர் வி.பி.சிந்தனின் அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, இ.பி.எஸ். மூர்த்தி, தா.செங்குட்டுவன், கே.பாலமுருகன், எஸ்.ராம சாமி, த.முருகேசன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தலைவர் முருகேசன், ஆட்டோ சங்க நகரத் தலை வர் சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக சிஐடியு கொடியை மாவட்ட துணைச் செயலாளர் ஈ.பி.எஸ் மூர்த்தி, மருந்து விற்பனை பிரதி நிதிகள் சங்க 54 ஆவது அமைப்பு தினத்தையொட்டி சங்கக் கொடியை, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் முருகேசன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.