tamilnadu

img

தோழர் கே.வரதராசன் படத்திறப்பு

திருச்சிராப்பள்ளி, மே 25- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், மத்தியக்குழு உறுப்பி னருமான மறைந்த தோழர் கே.வரத ராசன் படத்திறப்பு நிகழ்ச்சி பொன்மலை இடைக்கமிட்டி சார்பில் ஞாயிறு அன்று பொன்மலை இடைக் கமிட்டி அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பொன்மலை இடைக்கமிட்டி செயலாளர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். தோழர்  கே.வரதராசன் உருவப்படத்தை மூத்த தோழர் பாலமணி திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சம்பத் சிறப்புரை யாற்றினார். தஞ்சை என்.வி கலைக்குழு ரமேஷ் இரங்கல்பா வாசித்தார்.  இடைக்கமிட்டி உறுப்பினர்கள் சீனிவாசன், மணிமாறன், புவனேஸ் வரி, விஜயேந்திரன், துரைராஜ், ரயில்வே மகேந்திரன், ராஜா, பழனி, ஆறுமுகம் மற்றும் கிளை செயலா ளர்கள், வெகுஜன அரங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு செவ் வணக்கம் செலுத்தினர். நிறைவாக அரசு போக்குவரத்து சங்க தலை வர் மணிமாறன் நன்றி கூறினார். 

;