சீர்காழி: இடிந்து விழும் நிலையில் உள்ள கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளிக் கட்டிடத்தை இடித்து அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், கொள்ளிடம் பெருமாள் கோயில் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் இந்தப் பள்ளிக் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்க ளும் கட்டிடத்தின் உட்புறத்தில் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வந்து செல்லக் கூடிய கட்டிடமாக வும், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்திலும் இந்தப் பள்ளிக் கட்டிடம் அமைந்துள்ளது. தொடர் மழை பெய்தால் இந்த வலிமை குன்றிய கட்டிடம் இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழமை யான பள்ளிக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் பிரபு மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.