நாகப்பட்டினம், மே 15- தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலையைத் திருத்தி 12 மணி நேர வேலை நேரமாக மாற்றம் செய்ததை கண்டித்து வியாழக்கிழமை அன்று சிஐடியு சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை ஒன்றியம் சிக்கல், கீழ்வேளூர் ஒன்றியம், சாட்டியக் குடி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிக்கல் கடைத் தெருவில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனியாண்டி தலைமை வகித்தார். நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சு.மணி கலந்து கொண்டனர்.
சாட்டியக்குடி கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெயராமன் தலைமை வகித்தார். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் கோரிக்கை உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.என்.அம்பிகாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரியலூர் இதே போல் சிஐடியு சார்பில் அரியலூர் சிஐடியு அலுவலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது சிஐடியு மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், லிகாய் சங்க செயலாளர் கிருஷ்ணன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க சந்தானம், ராமதாஸ், கட்டுமான சங்க தொழிலாளர்கள் செல்வராஜ், பழனிவேல், மாதர் சங்க ஒன்றிய தலைவர் மலர்கொடி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.