அறந்தாங்கி, ஆக.9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகள் 15, அரசு உதவி பெறும் பள்ளிகள் 5, மெட்ரிக் பள்ளிகள் 12 என மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்ட சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 11, 14, 17, 19 வயது பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியை தலைமை ஆசிரியை எஸ்.கார்த்திகா துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் பரிசு வழங்கி பாராட்டினார் முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் ஆசைதம்பி வரவேற்று பேசினார் நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.