சிபிஎம், வாலிபர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குடவாசல், ஜூலை 24- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க த்தின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜான் கென்னடி மீது மணல் கட த்தல் உள்ளிட்ட சமூக விரோதச் செய லில் ஈடுபடும் தமிழார்வன் மற்றும் அவர் மகன் ஸ்டாலின் பாரதி உள்ளிட்ட கும்பல் ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது. அவ ர்களை உடனடியாக கைது செய்ய க்கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நகரச் செயலாளர் வழக்கறிஞர் சி.சிவசாகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பி ஜோதிபாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மன்னார்குடி
கோட்டூர் ஒன்றியம் சார்பில் கோ ட்டூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எல்.சண்முக வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
குடவாசல்
குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை வகித்தார். நன்னி லம் ஒன்றியம் பேரளம் கடைவீதியில் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.ஜெயசீலன் தலைமை வகித்தார். கொ ரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே. சீனிவாசன் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், செய ற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். வலங்கைமான் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் என்.ராதா, வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.