பெரம்பலூர்: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள மக்கா ஜீம்ஆ மஸ்ஜித் பள்ளி வாசலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாஷா முத்தவல்லி தலைமை ஏற்றார். பள்ளிவாசல் இமாம் முஸ்தபா, செயலாளர் ஜவகர்அலிம், பொருளா ளர் ஜியாவுதீன், அசன்முகமது, முகமதுபாரூக், முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்களும், மாணவ- மாணவிக ளும் கலந்து கொண்டனர். இதே போல் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். சிபிஐ மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட நிர்வாகி ப.காமராஜ், மனிதநேய மக்கள் கட்சி இலக்கிய அணி செயலாளர் தாகீர்பாஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், மனிதநேய ஜனநாயக கட்சி ஜஹாங்கீர், ஷாகுல், டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அல்லாபிச்சை, நூர்பள்ளி பாஷாமொய்தீன், ஜமாத் உலமா சபை மாவட்ட தலைவர் முகமது சல்மான், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்கள் அப்துல்கனி, ஷாஜகான், திராவிடர் கழகம் தங்கராசு, அக்ரிஆறுமுகம், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் அகவி, ப.செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு பி.ரமேஷ், எ.கலையரசி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி பி.சின்னசாமி, இந்திய தொழிலாளர் கட்சி ஈஸ்வரன், சமூக நீதி மாணவர் இயக்கம் பர்வேஜ்பாஷா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.