tamilnadu

img

செம்போடை கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு

செம்போடை, ஜூன் 27-  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செம் போடை ஆர்.விபொறியியல் கல்லூரி மற்றும் ஆர்.வி.பாலி டெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதை ஒழிப்புதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆர்.வி.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஆர்.வரத ராஜன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.வி.செந்தில் முன்னிலை வகித்தார். நெய் விளக்கு நல்லாசிரியர் ஆ.வேத ரெத்தினம் பேசினார். ஆர்.வி.கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜு, ஆர்.வி.பாலிடெக்னிக் முதல்வர் யோகா னந்த், ஆர்.வி.பொறியியல் கல்லூரி முதல்வர்(பொ) சுந்தர், முதலாமாண்டு துறைத் தலைவர் சிவகுமார் உள்பட 300-க்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்ன தாக பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநலத் திட்ட அலுவலர் நட ராஜன் வரவேற்புரையும், பொறியியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் அன்பழகன் நன்றியுரையும் வழங்கினர்.