tamilnadu

img

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு

விவசாயிகள் சாலை மறியல்

கும்பகோணம், பிப்.14- கும்பகோணம் அருகே திருப்பனந் தாள் ஒன்றியத்தில் உள்ள மணிக்குடி இளங்காநல்லூர் கீரங்குடி வஞ்சனூர் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்த விவ சாயிகள் அறுவடை செய்த நெல்மணிக ளை மணிக்குடி கிராமத்தில் திறக்கப் பட்ட நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அறு வடை செய்த நெல்லை கடந்த 10 நாட்க ளாக நேரடி கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து  காத்துக் கிடந்து பாதிப் படைந்து வருகின்றனர். நேரடி கொள் முதல் நிலையத்தில் சுற்று வட்டார பகுதி களில் உள்ள விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் வெளி வியா பாரிகளின் நெல் மூட்டைகளை முன்னு ரிமை அளித்து இரவோடு இரவாக கொள்முதல் செய்வதாக குற்றம் சாட்டும் விவசாயிகள், 5 நாட்களுக்கும் மேலாக காத்துக் கிடந்து நெல் மூட்டைகளை விற்கும் போது, விவசாயிகள் மூட்டை க்கு மேலும் 2 கிலோ முதல் 2.5 கிலோ வரை கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு மூட்டைக்கு ரூ 40 லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி  வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முறைகேடு களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி  திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடு பட்டு முழக்கங்களை எழுப்பினர். தகவல றிந்த திருப்பனந்தாள் காவல்துறையி னர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால்  மறியலை விவசாயிகள் கைவிட்டனர்.