திருச்சி அருகே தின்பண்டம் என்று நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மேற்கு அலகரை கிராமத்தை சேர்ந்த கங்காதரன் என்பவர் தனது சகோதர் பூபதி உறவினர்கள் மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோர் உதவியுடன் பாப்பாபட்டியில் இயங்கும் கல்குவாரியில் 4 ஜெலட்டின் குச்சிகளை வாங்கி உள்ளனர். அவற்றை பயன்படுத்தி திங்களன்று மணமேடு காவிரி ஆற்றில் வெடிக்க வைத்து மீன் பிடித்துள்ளனர்.
மீதியிருந்த ஜெலட்டின் குச்சியை கங்காதரன் தனது வீட்டில் வைத்துள்ளார். அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணு தேவ், தின்பண்டம் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்துள்ளார். அப்போது ஜெலட்டின் குச்சி வெடித்தில் சிறுவன் முகம் படுகாயம் மடைந்தது. இதைத்தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இதையடுத்து சிறுவன் உடலை வீட்டுக்கு எடுத்து சென்ற உறவினர்கள் சடலத்தை எரித்துள்ளனர். தகவலறிந்த அலகரை விஏஓ ரெஜினா மேடி அளித்த புகாரின் பேரில் கங்காதரன், மோகன்ராஜ், செல்வராஜ் ஆகிய மூன்று பேரை தொட்டியம் காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.