தஞ்சாவூர், நவ.30- தஞ்சாவூர் மாவட்டம் துகிலி கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் (26), இவர் 2010ல், 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி பல முறை பாலியல் வல்லுறவு செய்தார். இதனால் அச் சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து, அச்சிறுமி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அன்புரா ஜிடம் கூறினார். ஆனால், அன்புராஜ் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அச்சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அன்புராஜை 2011ல் கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சா வூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எழி லரசி விசாரித்து அன்புராஜூ க்கு 7 ஆண்டுகள் சிறை தண்ட னையும், 10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார்.