tamilnadu

ஆட்டை காப்பாற்றச் சென்று கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

வேடசந்தூர், ஏப்.27-வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் ஆட்டை காப்பாற்றுவதற்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம் பட்டியைச் சேர்ந்த விவசாயி ரெங்கசாமி மகள் மல்லீஸ்வரி(21). இவர் பாளையத்தில் உள்ள தனியார்பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஏப்ரல் 26 வெள்ளியன்று காலை தனது வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடு அவிழ்ந்துகொண்டு ஓடியது. அருகே உள்ள தனது பெரியப்பா அண்ணமுத்துக்கு சொந்தமான கிணற்றில் விழுந்துவிடும் என்பதற்காக ஆட்டை காப்பாற்றசென்றபோது எதிர்பாராதவிதமாக மல்லீஸ்வரி 90 அடி ஆளமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து தலையில்பலத்த காயமடைந்து அதே இடத்தில் இறந்தார். ஆடு கிணற்றில் விழாமல் தப்பியது. வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு)முத்துக்கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து மல்லீஸ்வரியின் உடலை கயிற்றால் கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து எரியோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மல்லீஸ்வரியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

;