கொடைக்கானல், செப்.2- குடிநீர் கேட்டு கொடைக்கானல் அண்ணா நகர் மக் கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கான லில் தென் மேற்கு பருவமழை பெய்தும் போதிய மழை இல்லாததால் குடிநீர் பிரச்சனை எழுந்துள்ளது. அண்ணா நகரில் 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் கல்லறை மேடு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். விரைவில் குடிநீர் வழங்குவதாக அதிகாரி கள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மறியல் கைவிடப் பட்டது. (நநி)