tamilnadu

img

பழனி கோவில் நிர்வாகத்திற்கு சிபிஎம் கண்டனம்

பழனி:
கொரோனா பரவல் காரணமாக பழனி மலைக்கு இயக்கப்படும இழுவை ரயில்  இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாரும் மலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இழுவை ரயிலுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகமும் அறிவித்துள்ளது.ஆனால், பாஜக-வினர் நவ.23-ஆம் தேதி பழனி நகரில் வேல் யாத்திரை நடத்துவதற்காக  மத்திய இணை அமைச்சர் முரளீதரன், மாநிலத் தலைவர் எல்.முருகன், அண்ணாமலை சீனிவாசன் உட்பட சுமார் 60 பேர் வந்திருந்தனர்.கொரோனா காரணமாக பக்தர்களை அழைத்துச் செல்ல முடியாது என்று சொன்ன கோவில் நிர்வாகம், பாஜகவினரை இரண்டு மின் இழுவை ரயில் மூலம் அழைத்து சென்றது.  இது அதிமுக அரசின் அப்பட்டமான அரசியல் சார்பு நடவடிக்கையாகும். காவல்துறையும் இவர்களைச்செல்ல அனுமதித்தது சட்டவிரோதம். முன்னதாக வாகன ஊர்வலத்தையும் பாஜகவினர் நடத்தினர். லாரியில் மேடை அமைத்து ஒலிபெருக்கி  அமைத்து பொதுக்கூட்டம் நடத்தினர். பொதுக்கூட்டத்தால் பல முக்கிய சாலைகளில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.பழனி கோவில் நிர்வாகத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இழுவை ரயிலை இயக்க அனுமதித்தநிர்வாக இணை ஆணையர் மீது  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களை மின் இழுவை ரயில் மூலம் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்திற்கும் அனுமதி வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

;