tamilnadu

img

மதிப்பெண் இல்லா தேர்ச்சி சான்றிதழ் கிடைக்குமா?

பழனி:
“மதிப்பெண்  இல்லா தேர்ச்சி சான்றிதழ்”  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு  வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணத்தால் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படவில்லை. 

தனியார் பள்ளிகள் மட்டுமே ஆன் லைன் வகுப்புகளை நடத்தின. அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு “ஆல் பாஸ்” முறையை பின்பற்றி அனைவரும்தேர்ச்சி என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதினர். வகுப்புகளுக்கும் சென்றனர். ஆதலால் இவைகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இந்த கல்வி ஆண்டில் (2020-21) இந்தமுறை பின்பற்றப்படுவதில் சிரமம் உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களும் மதிப்பெண்கள் வழங்க சிரமப்படுவர். எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு “மதிப்பெண்இல்லா தேர்ச்சி சான்றிதழ்”  வழங்க தமிழக அரசும் தமிழக கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்ய முன்வர வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சம் இல்லாத நிலை ஏற்படும்.  எனவே இம்முறையை பின்பற்றுமாறு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது.

;