india

img

ஆசிரியர் தகுதி தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் வரை நீட்டிப்பு....

புதுதில்லி
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7ஆண்டுகளில்  இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே  செல்லும் என்ற விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (டெட்) ஒரு முறை பெற்றால் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள் ளது. இந்த புதிய விதிமுறையா னது, 2011 முதல் ஆசிரியர் தகுதிசான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும் காலாவதியான சான்றிதழ்களை புதுப்பிக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு  அதிகரிக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

;