100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும், சம்பளம் ரூபாய். 600 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ள சேவுகம்பட்டி பேரூராட்சியில் புதன் கிழமை மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வி. கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. அருள்செல்வன், சங்க நிர்வாகிகள் சக்திவேல்,ராமர், ஜெயக்காளை, பெருமாள்சாமி, முத்துசாமி, செல்லப்பாண்டி ஆகியோர் பங்கேற்றனர். 700பெண்கள் உட்பட 800பேர் பங்கேற்றனர்.