tamilnadu

img

கர்நாடக அணையிலிருந்து தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் வந்தடைந்தது

 ஒகேனக்கல், ஜூன் 11- கர்நாடக அணையிலிருந்து திறக்கப் பட்ட தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்த டைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். கடந்த வாரங்களில்  காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த  கன மழை காரண மாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படி யாக அதிகரிக்கத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லை யான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து சில தினங் களில் வினாடிக்கு 6000 கனஅடியாக உயர்ந் தது. பிறகு  காவேரி நீர்பிடிப்பு பகுதியில் மழையளவு குறைந்ததால்,  படிப்படியாக நீர் வரத்தும் 1000 கனஅடி  அளவுக்கு குறைந் தது.   இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி, கர்நாடக அரசு, தமிழ கத்திற்கு இந்த ஜூன், ஜூலை மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கபினியிலி ருந்து 1300 கன அடியும்,  கிருஷ்ணா ராஜ சாகர் அணையில் 700 கன அடி என 2000 கன அடி  தண்ணீரை கடந்த சில தினங்களுக்கு முன்பு  திறந்துவிட்டது.

இந்த தண்ணீர் இரண்டு நாட்களுக்கு பிறகு, காவேரி ஆற் றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வுக்கு வியாழனன்று வந்தடைந்தது. இத னால் வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை மத்திய நீர் அளவீட்டு துறையினர் கணக்கெடுப்பு நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக உயர்ந் துள்ளது.  மேலும், மாலைக்குள்  படிப்படியாக நீர்வ ரத்து அதிகரித்து, 2500 கன அடி வரை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு பிறகு ஜூன் 12 ஆம் தேதியில்  மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்ப டவுள்ள நிலையில், காவேரி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

;