tamilnadu

img

பாலியல் குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து ஜூன் 4ல் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி, மே 20-மாற்றுத்திறனாளிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றவழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து ஜூன் 4 ஆம் தேதியன்றுகாத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தெரிவித்துள்ளர்.இதுகுறித்து அவர் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளி பெண்கள் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்று வெவ்வேறு பாலியல் குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தருமபுரி மாவட்ட காவல்துறை அலட்சியம் செய்து வருகின்றனர்.குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பென்னாகரம் வட்டம் பருவதனள்ளியில் 26 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி பாதித்தஇளம் பெண்ணை சமூக விரோதிகள் கூட்டாக பாலியல் வல்லுறவுசெய்து கிணற்றில் வீசிக் கொன்றனர். இச்சம்பவம் நடைபெற்று ஒருவருட காலம் கடந்த பின்னரும் குற்றவாளி ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை.மேலும், 2018 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதத்தில் ஜக்கம்பட்டியில் 11 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் முக்கியதடயமான சிறுமியின் உடைகளை காவல்துறையின் அஜாக்கிரதையால் தொலைக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் ஜெல்ராம்பட்டியில் 40 வயது மதிக்கத்தக்க சரியாக பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் அதே பகுதியை சேர்ந்த ஒருவரால் பாலியல் வல்லுறவு செய்ய முற்பட்ட வழக்கில்கட்டப்பஞ்சாயத்து செய்து, குற்றம் செய்தவரையே இரண்டாம் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கக்பட்டது. இதனால் அந்த மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை செய்துகொண்டார்.இந்த மூன்று குற்ற வழக்குகளிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் சார்பாககடந்த ஆண்டு டிச. 12 ஆம் தேதியன்று தருமபுரியில் போராட்டம் நடைபெற்றது. அன்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சங்கத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் அப்போதைய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தெரிவித்தார்.அதன் பின்னர் 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் இந்த வழக்குகளில் காவல்துறை முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இது குறித்து தற்போதைய மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க நேரம் ஒதுக்கித்தர கேட்டும் எந்த பலனும் இல்லை. காவல்துறையின் இந்தஅலட்சியப் போக்கை தமிழ்நாடுஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.மேலும், ஜூன் 4 ஆம் தேதியன்று பாலியல் குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சங்கத்தின் மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான், மாவட்டதுணைத் தலைவர்கள் எம்.மாரிமுத்து, தும்பராவ், தமிழ்செல்வி, மாவட்ட இணை செயலாளர் இடும்பன் ஆகியோர் உடனிருற்தனர்.

;