தருமபுரி, மார்ச் 3- இண்டூர் அருகே சின்ன பங்குநத்தம் பகுதியில் உயிர்ப லிக்கு காத்திருக்கும் திறந்தவெளி கிணற்றை மூடி பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே சின்ன பங்குநத்தம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திறந்தவெளி கிணறு தற்போது நீர் நிரம்பியுள்ளது. இந்த கிணற்றை சுற்றிலும் குடியிருப்புகள் மற்றும் கோவில் கள் உள்ளதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகி றது. மேலும், அப்பகுதியில் எப்போதும் குழந்தைகள் விளை யாடிய வண்ணம் உள்ளனர். இதனால், நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்த னம் காட்டி வருகின்றனர். எனவே, உயிர்பலி ஏற்படுவ தற்கு முன்பாக கிணற்றின் மீது இரும்பு மூடி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.