tamilnadu

நிலத்தை அபகரித்தவர் மீது எஸ்சி/எஸ்டி, வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு

 தருமபுரி, ஜூன் 12- தருமபுரியில் தலித்தின் நிலத்தை அபகரித்தவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரி நகரம் இலக்கிரம்பட்டியில் வசித்து வருபவர் சுருட்டையன் மகன் விசயன் (68), குறவர் சமூகத்தைச் சேரந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு தருமபுரி மாவட்டதுக்குட்பட்ட பாப்பிரெட்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டியில் சொந்த  வீடும், சர்வே எண் 54/4பி,யில் நன்செய்நிலம் 2.50, ஏக்கர்  நிலம் உள்ளது. இவரின் நிலத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விருதாசலம் மகன் சண்முகம் நிலம் உள்ளது. சண்முகத்தின் விவசாய கிணற்றை அகலப்டுத்தும் போது விசயன் நிலத்திலும் இவருடைய கிணறு தோண்டப்பட்டு ஆக்கிமிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து காவல் நிலையத்தில் விசயன் புகார் அளித்ததின் அடிப்படையில் சர்வேயர் அளந்து ஆக்கிமிப்பு செய்துள்ள நிலத்தை விட்டு விடவேண்டும் என காவல்துறையினர் சண்முகத்திடம் அறிவுறுத்தினர். ஆனால் சண்முகம் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை மாறாக விசயன் நிலதில் இருந்த தென்னைமரம், மாமர செடிகளை சேதப்படுத்தினார். மேலும் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து மிரட்டியுள்ளார். அக்கிரமிப்பு, மிரட்டுதல் குறித்து விசயன் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியன்று அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது காவல்துறை யினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எதிர் தரப்புக்கு ஆதரவு அளித்து வந்தனர். புகாரின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று விசயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில். தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்டார். இதன் அடிப்படையில் 5 மாதம் கழித்து செவ் வாயன்று (ஜூன் 11) அ.பள்ளிப்பட்டி காவல்நிலையத்தில் சண்முகத்தின் மீது 3(1) (எப்), 3(1) (ஜி), மற்றும் 447 ஆகிய 3பிரிவுகளின் எஸ்சி/எஸ்டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;