தலைவர்கள் வாழ்த்து
கோவை, பிப்.14– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரும், இன்ஜி னியரிங் சங்க கௌரவ தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யு.கே.வெள்ளிங் கிரியின் 80 ஆவது பிறந்தநாளையொட்டி தலைவர்கள், தொழிலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, கோவை உடையாம்பாளையத் தில் உள்ள யு.கே.வெள்ளிங்கிரியின் இல்லத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, இன்ஜினியரிங் சங்கத்தின் தலைவர் வி.பெருமாள், செயலாளர் சி.துரைசாமி, பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணியம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு தலைவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர். மேலும் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட தலை வர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், அக்வாசப் இன்ஜினியரிங், டெக்ஸ்மோ மோட்டார், டெக்ஸ்மோ பிரிசிசன், அக்வாசப் பவுண்டரி, அக்வாசப் பம்ப் மற்றும் சாம் புரூப்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.