tamilnadu

உணவு பாதுகாப்பு உரிமம் பெற இன்று சிறப்பு முகாம்

தருமபுரி, பிப்.13- தருமபுரி மாவட்டத்தில் உணவு பாது காப்பு உரிமம் பெற இன்று (வெள்ளியன்று) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இதுகுறித்து தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன் படி  உணவு பொருள் தயாரிப்பாளர்கள், உணவ கங்கள், மளிகை மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகள், பேக்கரிகள், இறைச்சி  கடைகள், துரித உணவகங்கள், டீ மற்றும்  பெட்டிகடைகள், நடமாடும் உணவு வணி கர்கள், சாலையோர கடைகள், மருந்து  கடைகள், உணவு பொருள் தயாரிப்பா ளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு  சான்று பெறுவதற்கான காலகெடு ஏற் கனவே நிறைவு பெற்று விட்டது.  இருப் பினும் ஒரு சில உணவு வணிகர்கள் எடுக்கா மலும், புதுப்பிக்காமலும் உள்ளனர்.  உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் இன்றி வணிகம் புரிவது கண்றியப்பட்டால் உடனடி அபராதம் ரூ.5 ஆயிரம் விதிக்கும்  நடைமுறை அரசு ஆணை வெளியிட் டுள்ளது. எனவே மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு புதியதாக எடுக்கவும், புதிப்பிக்க சிறப்பு முகாம் நடை பெறுகிறது. இம்முகாம் தருமபுரி கடைவீதி தங்கவேல் தெருவில் உள்ள நகர வர்த்தகர் சங்க மகாலில் நடக்கிறது.  தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதி,  கிராமங்களை சார்ந்த உணவு தொழில் சார்ந்த உணவு வணிகர்கள் அனைவரும், இம்முகாமினை பயன்படுத்தி உரிமம்  மற்றும் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக் கலாம். புதியதாக விண்ணப்பிக்க உள்ள வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், வாக்காளர் அட்டை ஏதாவது ஒரு  நகல் மற்றும் வணிகம் புரியும் இடத்திற் கான ஆவணச்சான்றுடன் வருடத்திற்கு உண்டான தொகையுடன், சேவைக் கட்டணம் 30 சதவிகிதம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். புதுப்பிக்க வேண்டியவர்கள் முந்தைய சான்றிதழுடன் வந்தால்,  உரிய விளக்கம், புதுப்பித்தல் மேற் கொள்ளப்படும். மேலும் www.food licensing.fssai.gov.in என்ற இணையதள வழியாக உணவு வணிகர்கள் தாங்க ளாகவே உரிய ஆவண சான்றுகளை பதி வேற்றம் செய்து, தொகை செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுக்கு பின்  உடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.