tamilnadu

img

குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

தருமபுரி, ஜூலை 22 - சிவாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள சிவாடி ஊராட்சியில் 750-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு போர்வெல் அமைத்து குடிநீர்த் தொட்டி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி அமைந்திருக்கும் இடம் மேட்டுப்பகுதி என்பதால் தண்ணீர் சரியான முறையில் வருவதில்லை. இதனால் தொடர்ந்து சிரமப்பட்டு வந்த மக்கள் குடிநீருக்காக விவ சாயக் கிணறுகளிலும், தண்ணீர் வரும் பகுதிக்குச் சென் றும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.  இப்பிரச்சினை பல மாதங்களாக நீடித்து வந்ததால் அப்பகுதிப் பொதுமக்கள் சிவாடி ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கையை விளக்கி முறையிட்டனர். இருப்பினும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆவேசமடைந்த மக்கள் காலிக் குடங்களுடன் சிவாடி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஊராட்சிமன்றத் தலைவர் ஆறுமுகம் நேரில் வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், இரு தினங்களுக்குள் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தைக் கை விட்டு கலைந்து சென்றனர்.

;