tamilnadu

img

வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, ஜன. 22-  வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக் கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்த விட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் கள் கே.ஆர்.மாரியப்பன் (எல்லப்புடை யாம்பட்டி), அமுதா சங்கர் (கீரைப்பட்டி) ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக் கம் 34.5 அடி உயரம் கொண்டதாகும். தற் போது, இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 30 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. தென் மேற்கு மற்றும் வடக்கிழக்கு பருவ மழை யினால் நீர்வரத்து குறைந்ததால், வரட்டாற் றில் தண்ணீர் செல்லவில்லை. இந்நிலையில், சித்தேரி மலைத் தொட ரில் வந்த மழைநீர் முழுவதும் வள்ளிமதுரை நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள் ளது. மேலும், கீரைப்பட்டி, எல்லப்புடை யாம்பட்டி, அச்சல்வாடி, பொன்னேரி ஊராட்சிகளுக்கு உள்பட்ட அனைத்து பகுதி களிலும் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் சிறிதளவும் தண்ணீர் இல்லை. இதனால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற் படும் நிலையுள்ளது.  எனவே, கீரைப்பட்டி, எல்லப்புடையாம் பட்டி ஊராட்சிகளில் உள்ள பழைய ஆயக் கட்டுகளுக்கு வரட்டாறு வழியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதேபோல், ஏரி கள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலை களை நிரப்ப மாவட்ட நிர்வாகம்  உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.

;