tamilnadu

img

தலித் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுத்திடுக

தருமபுரி, அக். 13- உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சிஐடியு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் தலித் இளம் பெண் பாலியல் வன்கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையின் கீழ் காலக்கெடு நிர்ணயித்து விசாரணை  நடத்த வேண்டும். கடமையை செய்யத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மற் றும் இதர அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாது காப்பை உத்திரவாதப்படுத்த வேண் டும். தலித் சமூகத்தினர் மற்றும் பெண்க ளுக்கு எதிராக இழைக்கப்படும் வன் முறைகளை தடுத்திட கடும் சட்டங் களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஏ.தெய்வானை தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் சி.நாக ராசன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் வி.பி.சாமி நாதன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வம், மாவட்ட துணைத் தலைவர் பெருமாள், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பாப்பிரெட்பட்டியில் சிஐடியு தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கிய தாஸ், காரிமங்கலத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.மாரி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தாங் கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.எம்.எத்திராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் வி.கோவிந்த சாமி, மாவட்டப் பொருளாளர் செல்வ ராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.கே.நஞ்சுடன், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர்.மகா லிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் எம்.அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.