tamilnadu

img

பொங்கல் பரிசு வழங்கும் விழா

 தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா ஞாயிறன்று நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதிய மான்கோட்டையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழா வில் 4,24,971 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.48.93 கோடி மதிப் பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கப்பட்டது. இதில் ரூ.1000 ரொக்கம் மற்றும் ரூ.8.21 கோடி  மதிப்பிலான 6 லட்சத்து 22  ஆயிரத்து 959 வேட்டி-சேலை  வழங்கும் நிகழ்வை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  துவக்கி வைத்தார்.  இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை  வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி மண்டல கூட்டுறவுச் சங் கங்களின் இணைப்பதிவாளர் சு.இராமதாஸ், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன் பழகன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) தேன்மொழி, தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற் பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் எம். பொன்னுவேல், தரும புரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி  துணைத் தலைவர் எம்.கே.வேலு மணி, தருமபுரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவ பிரகாசம், மாவட்ட வழங்கல் அலு வலர் ஆ.தணிகாசலம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் 318  முழு நேர நியாய விலைக்கடை களும், 89 பகுதி நேரக்கடைகளும் ஆக மொத்தம் 407 நியாயவிலைக் கடைகளில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 323 குடும்ப அட்டைதாரர்கள் உள் ளனர். இவர்களுக்கு ரூ.21 கோடியே  23 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கத் தொகையுமாக மொத்தம் ரூ.24 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 763 மதிப்பிலான பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங் கப்படவுள்ளது.கோத்தகிரி கூட் டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு பொருட்களை குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி முன்னி லையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.  இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.  அப்போது, ஜன.12 ஆம் தேதி வரை  பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும்  ரொக்கத்தினை பெற்றுக் கொள்ள லாம். விடுபட்டவர்களுக்கு ஜனவரி  13 அன்றும் பரிசு தொகுப்பு வழங்கப் படும் என்றார். குடும்ப அட்டை தொலைத்த இனங்களில், அவர்களுக்கு அக் குடும்ப அட்டையிலுள்ள நபர் களில் ஏதேனும் ஒருவரின் ஆதார்  அட்டையினை வைத்தோ அல்லது  பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் (ஒரு முறை கடவுச் சொல்) OTP அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங் கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த குறைபாடுகள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 0423-2441216 என்ற எண்ணிற்கு பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சேலம் 
சேலத்தில் பொங்கல் பரிசு வழங் கும் விழா பள்ளப்பட்டி கூட்டுறவு அங்காடி முன்பு நடைபெற்றது.  இதில் சட்டமன்ற உறுப்பினர் கள் பங்கேற்று பரிசுகளை பொது மக்களுக்கு வழங்கினர்.

;