தருமபுரி, ஜூன் 28- தருமபுரி மாவட்டம், பாளையம் கிராமத்தில் வருவா யின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிவாரணமாக உணவுபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் அனைத்து வித மக்களும் எவ் வித வருவாயுமின்றி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாளையம் கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மாற்றுத் திற னாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் கொண்ட நிவாரண தொகுப்பு வழங்கப்பட் டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலா ளர் ஏ.குமார், மாவட்ட குழு உறுப்பினர் பி.வி.மாது, மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தமிழ் செல்வி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.