tamilnadu

வன உரிமை சட்டத்தின்படி நிலப்பட்டா வழங்கிடுக பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜூன் 11- வன உரிமைசட்டத்தின் கீழ் விண் ணப்பம் செய்தவர்களின் நிலங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வத்தல்மலை கிராம பழங்குடி மக்கள்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், வத்தல்மலை யில் பெரியூர், மன்னாங்குழி, ஒன்றியங் காடு, நாயக்கனூர், சின்னாங்காடு, கொட்டலாங்காடு, குழியனூர், பால் சிலம்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் அனைவரும் பழங்குடி மக்களாகும். இவர்கள் பாரம்பரியமாக வனநிலங்களில் விவ சாயம் செய்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு வன உரிமை சட்டம் 2006-ன்படி பழங்குடி மக்கள் சாகுபடி செய்து வரும் வனநிலங்க ளுக்கு தனிநபர் உரிமம் வழங்கி பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி 141 குடுமபங்கள் விண்ணப் பித்திருந்தனர். இதுகுறித்து கிரா மசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது குறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழங்குடி மக்களின் வாழ் வாதாரமாக, சாகுபடி செயதுவரும் நிலத்தை தனிநபர் உரிமம் வழங்கி பட்டா வழங்கவேண்டும் என வலி யுறுத்தி வத்தல்மலைகிராம பழங்குடி மக்கள்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.

;