தருமபுரி, மே 18 - வாகன தணிக்கையின்போது பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார் வலர்கள் கையில் காவல்துறையினர் லத்தியை கொடுத்து அத்துமீறி செயல்பட வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவ தும் காவல்துறையினர், முன்னாள் ராணு வத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக் கப்பட்டு ஊரடங்கு பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நி லையில் பாலக்கோடு பகுதியில் தன்னார் வலர்கள் கைகளில் போலீசார் பயன்படுத் தும் லத்தியை பயன்படுத்துவது மட்டு மின்றி, இருசக்கர வாகனத்தில் செல் லும் வாகன ஓட்டிகளை விரட்டி மறித்து சாவிகளை பறித்து அத்துமீறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகை யில், தன்னார்வலர்கள் சிலர் நீண்ட தடியு டன் அவ்வழியாக செல்பவர்களின் வாக னங்களை மடக்கிப் பிடித்து விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படுகின் றனர். இதனால் அவர்களை கண்டாலே வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின் றனர். கடந்து ஒரு மாத்திற்கு முன் ஊரடங்குப் பணியில் இருப்பவர்கள் கையில் லத்தி வைத்திருப்பது கூடாது என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தன்னார் வலர்கள் தணிக்கை செய்கிறோம் என்ற பெயரில் லத்தியிடன் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். இதனை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கண் காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.