tamilnadu

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு ரூ. 7500 நிவாரணம் வழங்கிடுக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு

அரூர், மே 10 - தமிழகத்தில் அனைத்து கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 7500 நிவா ரணத் தொகையினை வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலா ளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமிக்கு தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஈ.கே.முருகன்  அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள் ளதாவது: தமிழகத்தில் சுமார் 10 லட்சம் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உள்ள னர். கொரோனா நோய்த் தொற்று காரண மாக மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரையிலும் பொது முடக்கத்தை மத்திய, மாநில  அரசுகள் அறிவித்துள்ளது. இதனால் கரும்பு வெட்டும் தொழிலாளர் கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் பாதிக் கப்பட்டுள்ளனர்.  எனவே, தமிழக அரசு கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 7500-யை  நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழகத் தில் உள்ள 43 சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு அரைவைப் பணிகளை தொடங்க வேண்டும். தமிழகத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் தரமானதாக வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் அத்தி யாவசியப் பொருள்களை முற்றிலும் இலவச மாக வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;