தருமபுரி, செப். 21- அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மும்முனை மின்சார இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட விவசாய பணிகளுக்காக மும் முனை மின்சார இணைப்புகள் வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் விவசாயி கள் விண்ணப்பம் அளித்து சுமார் 15 வருடங் களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். அதேபோல், உடனடி மின் இணைப்புகள் பெறுவதற்காக ரூ.2 லட்சம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் செலுத்தும் திட்டத்தி லும் பலர் விண்ணப்பித்து காத்திருக் கின்றனர். இந்நிலையில் பதிவு மூப்பு அடிப்படை யில் மும்முனை மின்சார இணைப்புகள் முறையாக வழங்கப்படவில்லை என விவ சாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே, மின் இணைப்பு கோரியுள்ள விவசாயிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் விரைந்து மின் இணைப்புகளை வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மின் வாரியத்தையும், மாவட்ட நிர்வா கத்தையும் வலியுறுத்துகின்றனர்.