தருமபுரி, மே 17-ஆட்டோ ஸ்டேண்டில் மின்வாரியம் மூலம் டிரான்பார்மர்பர் அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என சிஐடியு தருமபுரி மாவட்ட ஹரிபட் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தருமபுரி இராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது. தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், அரசு அலுவலங்களுக்கு செல்லவும், அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லவும் இந்த ஆட்டோ ஸ்டேண்டுக்கு வருகின்றனர். இந்நிலையில், ஆட்டோ ஸ்டேண்டில் இரவு நேரத்தில் தீடீர்என குழி தோண்டப்பட்டது. விசாரித்தபோது மின்வாரியம் மூலம் டிரான்ஸ்பார்மர் அமைப்பதாக தகவல் தெரிவித்தனர். இந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்தால் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். மேலும்,இங்கு ஆட்டோக்களை நிறுத்தமுடியாது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.எனவே, அமைய உள்ள டிரான்ஸ்பார்மரை ஆட்டோ ஸ்டேண்டுக்கு இடையூறு செய்யாமல் வேறு இடத்தில் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தருமபுரி மாவட்ட ஹரிபட் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் தருமபுரி நகராட்சி ஆணையர் மற்றும் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ஆகியோரை சந்தித்து மனு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ராஜகோபால், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.