tamilnadu

img

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தலில் திமுக வெற்றி

தருமபுரி, ஜன.30- ஊத்தங்கரை ஊராட்சி ஒன் றிய குழு தலைவர், துணைத்தலை வர் பதவிகளில் திமுக வேட்பாளர் கள் வெற்றி பெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் தில் 22 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்கள் உள்ளன. இந்நிலை யில் உள்ளாட்சி தேர்தல் நடை பெற்றதில் திமுக சார்பில் 8 பேரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் ஆறு பேரும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் ஒருவரும், சுயேட்சையாக நான்கு பேரும்  வெற்றி பெற்றனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றி யக் குழு தலைவருக்கான தேர்த லானது கடந்த ஜனவரி 11 ஆம் தேதியன்று நடைபெற இருந்த நிலையில், அதிமுகவினர் தேர் தல் நடத்துவதற்கான பேலட் பேப் பரை கிழித்து வன்முறையில் ஈடு பட்டதால் தேர்தல் ஒத்திவைக் கப்பட்டது. இந்நிலையில் வியாழனன்று (ஜன.30) நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் உஷாராணி கும ரேசனும், அதிமுக சார்பில் சாந்தி  வேந்தனும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் திமுக வின் உஷாராணி குமரேசன் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். பின்னர் ஒன்றிய துணைத் தலைவராக திமுகவின் சத்திய வாணிசெல்வம் போட்டியின்றி  ஒருமனதாக தேர்வு செய்யப்பட் டார். இதனைத்தொடர்ந்து வெற் றிபெற்ற தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊத்தங் கரை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலிருந்து ஊர்வல மாக வந்து பெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித் தனர். இதில் திமுக மாவட்டச் செய லாளர் செங்கூட்டுவன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., இ.ஜி.சுகவனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் ஆகியோர் பங் கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

;