tamilnadu

img

தருமபுரி நவீன ஆவின் பாலக, பூங்காவில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

தருமபுரி, ஜூன் 1-தருமபுரி நவீன ஆவின்பாலகம் மற்றும் பூங்காவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்இல்லாமல் பொதுமக்கள்அவதிப்பட்டு வருகின்றனர்.தருமபுரி நகரம் நான்கு வழிச் சாலை அருகே உள்ள ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆவின்பாலகம் மற்றும் பூங்கா உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியன்று ஆவின் நவீன பாலக விரிவாக்கம் மற்றும் பூங்கா தொடங்கி வைக்கப்பட்டது.  அதன் பின்னர் ஆவின் பாலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. தற்போது ஆவின் பாலகத்திற்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும்  மேற்பட்டபொதுமக்கள் வந்து செல்கின்றனர்.மேலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக  பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த ஆவின் பாலகம் தருமபுரி நகரத்தின் மையப்பகுதியில் இருப்பதால் நகரமக்கள் அதிகம் வரும்  பொழுதுபோக்கு இடமாக ஆவின் பூங்கா திகழ்கிறது. இந்த ஆவின் பாலகத்திற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வந்து செல்கின்றனர். ஆனால் இந்த ஆவின்பாலகம் மற்றும் பூங்காவில் பொதுமக்கள் குடிப்பதற்கான சுத்தமான குடிநீர் இல்லை. ஆவின் பழக்கத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் வேறு வழியின்றி சுகாதாரமற்ற புளோரைடு கலந்த குடிநீரை  குடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆவின் பாலகம் மற்றும் பூங்காவிற்கு வரும்  குழந்தைகள் விளையாடுவதற்கு என ஊஞ்சல்கள் மற்றும் சில விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இங்கு குழந்தைகள் விளையாடிவிட்டு  ஆவின் பாலகத்தில் உள்ள தண்ணீரை குடிக்கும் நிலை உள்ளது. சுகாதாரமற்ற நீரையே குடிப்பதால், குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. புளோரைடு கலந்த குடிநீரால்  பொதுமக்களுக்கும்,  குழந்தைகளுக்கும் தொற்று நோய்ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே, ஆவின் பாலகம் மற்றும் பூங்காவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.