tamilnadu

img

தொழிலாளி-விவசாய ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன. 19- தியாகிகள் தினத்தில் தொழி லாளி-விவசாய ஒற்றுமையை வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஞாயி றன்று தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விலைவாசி உயர்வை கட் டுப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படி யான விலை தீர்மானிக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 1982ஆம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராடிய நாகை மாவட்ட தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகி யோர் துப்பாக்கிச்சூட்டில் பலி யானார்கள். இத்தினத்தை விவசாயிகள்-தொழிலாளிகள் ஒற்றுமை தினமாக கடைபிடிக் கப்பட்டு வருகிறது. விவசாயத்தை பாதுகாக்க விவசாய தொழிலாளர்களுக்கு மத்திய ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்றி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண் டும். தொழிலாளர் விரோத சட் டத்தை திரும்பப்பெற வேண்டு மென ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டன. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலா வதி, விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் கே.என்.மல்லை யன், மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட துணைத்தலைவர் இ.பி.பெரு மாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முரு கன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் பேருந்துநிலை யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்தும், தேசிய குடி யுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசா யிகள் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த திட்டமிட்டனர். இந் நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ள னர். இதனால் அப்பகுதியில் காவல்துறைக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறுகையில், கோபி செட்டிபாளையம் காவல்நிலை யத்தில் நான்கு நாட்களுக்கு முன்பே ஆர்ப்பாட்டத்திற்கு அனு மதி கேட்டு மனு அளித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட ஒன்று கூடியபோது காவல் துறையினர் தடுப்பதாகக் கூறி னர். காவல்துறையின் இத்த கைய நடவடிக்கையைக் கண் டித்து, ஜனநாயகத்தில் போராட்ட உரிமைகளுக்கும் அனுமதி வழங்காமல், தடுப்பதற்கு எதிரா கக் கண்டன முழக்கங்களை எழுப் பினர்.  இந்நிகழ்வில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட தலை வர் அய்யாவு, விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் சண்முக வள்ளி, மாவட்ட தலைவர் விஜய ராகவன் மற்றும் தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ரகுராமன் உள்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

;