tamilnadu

img

தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்த கொடுமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்திடுக- சிபிஎம்

தருமபுரி, ஜூலை 17- பென்னாகரம் அருகே தலித் மாண வனை கையால் மலம் அள்ள வைத்த வரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள கண் டன அறிக்கையில் கூறியதாவது, தருமபுரி பென்னாகரம் வட்டம், கோடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணமூர்த்தி. தலித் சமுதா யத்தைச் சார்ந்த இவரது மகன் ஹரி ஹரன் (14) என்பவர் பத்தாம் வகுப்பு  படித்து வருகிறார். இந்நிலையில், செவ் வாயன்று அதே ஊரைச் சேர்ந்த ராஜ சேகர் என்பவர் நிலத்தில் புதர்மண்டிய பகுதியில் ஹரிஹரன் மலம் கழித்து விட்டார் என கூறப்படுகிறது. இத னால் ஆத்திரமடைந்த ராஜசேகர், அச் சிறுவனை சாதி பெயரைக் கூறி கடுமை யாக தாக்கியுள்ளார். இதன்பின் அச்சிறுவனை நிர்பந்தப்படுத்தி அவரது கையாலேயே மலத்தை அள்ள வைத்துள்ளார்.  இதுகுறித்து அறிந்த மாணவன் தந்தை பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர். ஆனால் கொரோனாவைக் காரணம் காட்டி புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் மனுவைப் பெட்டியில் போடச் சொல்லியுள்ள னர்.  பொதுமுடக்கக் காலத்திலும் தமி ழகமெங்கும் இத்தகைய தீண்டாமைக் கொடுமைகள் மிகக் கொடூரமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இத் தகைய காட்டுமிராண்டித் தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இக்கொடிய செயலில் ஈடு பட்ட குற்றவாளியை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்ய வேண்டும். வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மாணவர் களுக்கு உரிய சிகிச்சையும், இழப் பீடும் வழங்க வேண்டும். புகார்  மனுவை வாங்க மறுத்த காவல்துறையி னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. மேலும், இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கட்சியின் பென்னாகரம் பகுதி குழு செயலாளர் கே.அன்பு, மாவட்ட குழு உறுப்பினர் குமார், நகர செய லாளர் எஸ். வெள்ளியங்கிரி, பகுதி குழு  உறுப்பினர் ஆ.ஜீவானந்தம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலை வர் தேவன், செயலாளர் ரவி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனுவினை அளித்த னர்.

;