தருமபுரி, மார்ச் 1- தருமபுரி அருகே நடைபெற்ற நியாய விலைக்கடை திறப்பு விழாவில், விவ சாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஜோதிப்பட்டி புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியாய கடை யை திறந்து வைத்தார். இவ்விழாவில், 46 விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப் பிலான பயிர் கடன் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலு வலர் எச்.ரஹமத்துல்லா கான், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் இராம தாஸ், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் பொன்னுவேல், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் குமார், துணை பதிவாளர் வரதராஜன், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், வடி வேலன் மற்றும் கூட்டுறவு துறை அலுவ லர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.