tamilnadu

img

மேம்பாலம் அமைக்கும் பணி தரக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வு

தருமபுரி, டிச.31-  அரூரை அடுத்த பெரிய பண்ணைமடுவில் புதிய தாக அமைக்கப்படும் மேம் பால கட்டுமானப் பணி களை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு குழுவினர் செவ்வாயன்று ஆய்வு செய்தனர். அரூர் வட்டம், அனுமன் தீர்த்தம்-தீர்த்தமலை  நெடுஞ்சாலையில், பெரிய பண்ணைமடுவு எனுமி டத்தில், நபார்டு மற்றும்  கிராமச்சாலைகள் திட் டத்தில் வாணியாற்றின் குறுக்கே ரூ.4.7 கோடி மதிப்பில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பாலம் 60 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாகும். தற்போது பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலத்தின் உறுதி தன்மைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையின் சேலம் கோட்டப் பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) நிதிலன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வில் உதவி கோட்டப் பொறி யாளர்கள் தமிழ்ச்செல்வன், சுரேஷ்குமார், உதவிப் பொறியாளர்கள் ஞானசேகரன், ப.நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.  

;