tamilnadu

img

5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்க கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்

பென்னாகரம், ஜன. 26- மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் தமிழக அரசு அறிவித்துள்ள 5 மற் றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வு களை ரத்து செய்யக்கோரியும் ஞாயிறன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடை பெற்றது. இதில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றி யத்திற்குட்பட்ட பூதப்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதேபோல், கோடியில் நடைபெற்ற கிராம சபைக் கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் கமலா தலைமை வகித்தார். இந்த கூட்டத் தில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதேபோல்  தொன்னகுட்டள்ளி ஊராட்சி கிராம சபை  கூட்டம் தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

;