tamilnadu

img

அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் நோயாளிகள் அவதி

தருமபுரி, செப்.9- அரூரில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு மருத்துவர்கள் வருவ தில்லை என்றும், கேள்வி கேட்கும் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையா ளர்கள் மீது பொய்யான புகார் அளிக்கும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இவ்வமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலை வர் கொ.வேடியப்பன், செயலர் செல்லை சக்தி, பொருளர் கோ.ராமதாசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தருமபுரி மாவட்டம்,  அரூர் அரசு மருத்துவமனை யில் நாள்தோறும் ஆயிரம் புறநோயாளி கள், 200 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர். இந்த மருத்துவ மனையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய், சேய் நல மையம் (சீமாங் சென்டர்) உள்ளது. இந்த நிலையில், அரூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. மாறாக, காலை நேரங்களில் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் 9 மணிக்கு வேலைக்கு வரும் நிலையுள்ளது. மேலும், மருத்துவர்களின் காலதாமத வருகை, பணியில் இல்லா மல் இருப்பது குறித்து புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரி கையாளர்களை மிரட்டும் நிலையுள்ளதாக அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரூர் அரசு மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவ அலுவலராக உள்ள ராஜேஷ்கண்ணன், நோயாளிகளை மிரட்டி வருகிறார். அதேபோல், சமூக மோதல் களை உருவாக்கும் வகையில் பேசுகிறார். தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் முன்னிலையில் நடை பெற்ற, மருத்துவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி அவர் மிகவும் மோசமான கருத்தை கூறியுள்ளார்.  இவ்வாறு மருத்துவ அலுவ லராக பொறுப்பு வகிக்கும் ராஜேஷ்  கண்ணனால் இரு சமூகத்தினர் இடையே  மோதல் உருவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  இதேபோல், இவர் அரூர் அரசு மருத்துவ மனைக்கு சொந்தமான சிலிண்டர், உயிர் காக்கும் மருந்துகளை, கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனைக்கு எடுத்துச் சென்று முறை கேடாக பயன்படுத்தி வருகிறார். எனவே, தமிழக அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.  இந்த முறைகேட்டில் ஈடு படும் மருத்துவர் ராஜேஷ்கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரூர் அரசு மருத்துவமனையில் காலி யாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரூர் அரசு மருத்துவ மனையில் கூடுதல் மருத்துவர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;