tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

தருமபுரி:
குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பானஓய்வூதியம் ரூ.9 ஆயிரம்  வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்தை தனியாருக்கு விடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 5ஆவது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தருமபுரியில் நடைபெற உள்ளது. 

இதையொட்டி வரவேற்புக்குழுக் அமைப்பு கூட்டம் தருமபுரியில் மாவட்டத் தலைவர் ஏ.தெய்வானை தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.லில்லி புஷ்பம் வரவேற்றார். சிஐடியு மாநில பொருளாளர் சி.மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சி.அங்கம்மாள், மாநில பொதுச் செயலாளர்  டி.டெய்சி ஆகியோர் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து வரவேற்புக் குழுவின் தலைவராக எம்.லில்லிபுஷ்பம், செயல் தலைவராக ஏ.தெய்வானை, செயலாளராக  சி.நாகராசன், பொருளாளராக எம்.ஈஸ்வரி, குழு அமைப்பாளர்களாக அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜெயக்குமார், பொருளாளராக ஆர்.செல்வம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் சி.கலாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;