tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்தின் பங்கு நீரைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, பிலிப்பின்ஸை தலை மையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியை மீட்கும் வகையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சீனா விடம் இந்தியா திட்டவட்டமாகக் கூறி யுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் புதனன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 600 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவி யியல் ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட ங்களில் மின்சார கட்டணம் செலுத்த ஜூலை 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேரு வதற்கு ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

ஜியோவில் 7.7 சதவீத பங்குகளை ரூ.33,737 கோடிக்கு கூகுள் நிறுவனம் வாங்குவதாக, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்குடன் இணைந்து, இணைப்பில் நிஜமாக்கல் என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது.

ஜூலை 20 முதல் ஏர் - இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் நாடு முழுவதும் செயல்பட துவங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.